search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு அந்தஸ்து"

    ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடைபாதை வழியாக திருப்பதி கோவிலுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளார். #RahulGandhi #RahulGandhiPadyatra ##RahulinTirumala #RahulinTirupati
    திருப்பதி:

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா வந்தார். அங்கிருந்து சாலை வழியாக திருப்பதி வந்த ராகுல், அலிப்பிரி பகுதியிலிருந்து திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் சன்னதிக்கு நடைபாதை வழியாக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.

    சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திலான இந்த பாதயாத்திரையில் அவருடன் பிரியங்காவின் மகன் ரைஹான் வதேராவும் வந்துள்ளார்.



    தெலுங்கானா என்ற தனி மாநிலம் உருவாக்கப்பட்டபோது ஆந்திராவுக்கு சிறப்பு மாநிலத்துக்கான அந்தஸ்துடன் சலுகைகள் அளிக்கப்படும் என முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து இந்த நடைபயணத்தை அவர் மேற்கொண்டுள்ளதாக ஆந்திர மாநில காங்கிரஸ் பிரமுகர்கள் தெரிவித்தனர்.  

    இன்னும் சிறிது நேரத்தில் வெங்கடேஸ்வர பெருமாள் சன்னதியில் சாமி தரிசனம் செய்யும் ராகுல் காந்தி, இன்று மாலை தாரகராமா அரங்கத்தில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். #RahulGandhi #RahulGandhiPadyatra ##RahulinTirumala #RahulinTirupati 
    துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங். தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்தார். #Dubai #Congress #RahulGandhi #SpecialStatusforAndhraPradesh
    துபாய் :

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை துபாய் சென்றடைந்தார். துபாய் விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    துபாய் சென்றுள்ள ராகுல் அங்குள்ள தொழிலாளர் காலனியில் இந்திய சமூகத்தினர் மற்றும் மாணவர்களை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:



    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து துபாயில் வேலை செய்து வருகிறீர்கள். அதன்மூலம் இந்தியாவிற்கு பெரும் உதவி செய்து வருகிறீர்கள். எனவே உங்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நீங்கள் சிந்தும் வியர்வை, ரத்தத்தினால் இந்த நாட்டை வளப்படுத்தி வருகிறீர்கள். உங்களால் அனைத்து இந்தியர்களும் பெருமிதம் அடைகிறோம்

    வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். #Dubai #Congress #RahulGandhi #SpecialStatusforAndhraPradesh
    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து பிரதமருக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டு உள்ளனர். #TDP #PrivilegeMotion #Modi
    புதுடெல்லி:

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் மீது கடந்த 20-ந்தேதி நடந்த விவாதத்துக்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடாது என 14-வது நிதிக்குழு பரிந்துரைத்து இருப்பதாக கூறினார்.

    ஆனால் அப்படி ஒரு பரிந்துரையை 14-வது நிதிக்குழு வெளியிடவில்லை என தெலுங்குதேசம் கட்சித்தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருக்கும் தனது கட்சி எம்.பி.க்களுடன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியபோது இதை அவர்களிடம் கூறிய சந்திரபாபு நாயுடு, இதன் மூலம் பிரதமரும், மத்திய மந்திரிகளும் மக்களவையை தவறாக வழிநடத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

    எனவே பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பரிசீலிக்குமாறு தெலுங்குதேசம் எம்.பி.க்களுக்கு அவர் அறிவுறுத்தினார். அதன்பேரில் பிரதமருக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க அந்த கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டு உள்ளனர்.

    முன்னதாக ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  #TDP #PrivilegeMotion #Modi 
    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளிக்கவே இல்லை என ஆந்திர பாஜக தலைவர் கண்ணா லக்சுமிநாராயணா தெரிவித்துள்ளார். #AndhraPradesh #BJP
    ஐதராபாத்:

    மோடி தலைமையிலான மத்திய அரசு ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை எனவும், ஆந்திர மாநிலத்தை வஞ்சித்து விட்டதாகவும், அம்மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார்.

    இதையடுத்து, சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, கடந்தமுறை நடந்த பாராளுமன்ற கூட்டத்தை முடக்கிய தெலுங்கு தேசம் கட்சி, இந்தமுறை மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது.

    இந்நிலையில், இன்று கட்சி உறுப்பினர்களுடனான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ.க.வின் ஆந்திர மாநில தலைவர் கண்ணா லக்சுமிநாராயணா, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மோடி வாக்குறுதி அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.



    மேலும், சிறப்பு அந்தஸ்துக்கு பதிலாக வேறு பல்வேறு சலுகைகளை தர மத்திய அரசு முன்வந்ததாகவும், அதனை சந்திரபாபு நாயுடு ஏற்றுக்கொண்டார் ஆனால் தற்போது மாற்றி பேசுகிறார் எனவும் சாடியுள்ளார்.

    இதையடுத்து, போலவரம் திட்டத்துக்கு கூடுதல் நிதி மத்திய அரசிடம் இருந்து அளிக்கப்பட்டதாகவும், ஆனால், அதிலும் ஊழல் மட்டுமே நடப்பதாகவும் குற்றம்சாட்டிய மாநில தலைவர் கண்ணா லக்சுமிநாராயணா, மாநில அரசின் ஊழலை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக விமர்சித்துள்ளார். #AndhraPradesh #BJP
    ஒடிசா மாநில முதல்வர் நவின் பட்நாயக் தங்கள் மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். #Odisha #NaveenPatnaik #specialcategorystatus

    புவனேஷ்வர்:

    தெலங்கானா தனி மாநிலமாக பிறிக்கப்பட்ட போது ஆந்திரப்பிரதேச மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் இதனை மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை. இந்த காரணத்தால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மோடி ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். 

    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பாஜக உடனான கூட்டணியை சமீபத்தில் முறித்துக்கொண்டது. 
     
    ஆந்திரா மாநிலத்திற்கு இன்னும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத நிலையில்,  தற்போது ஒடிசா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
     
    அந்த கடிதத்தில், இந்தியாவில் மிகவும் பின்தங்கியுள்ள மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று. இங்குள்ள மக்கள்தொகையில், எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினரே பெரும்பான்மையாக உள்ளனர். மேலும், இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும் மாநிலமாகவும் ஒடிசா உள்ளது. மாநிலத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, ஒடிசா மாநிலத்துக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #Odisha #NaveenPatnaik #specialcategorystatus
    ஆந்திராவுக்கு நிதி அளிக்க மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசுக்கு நாம் ஏன் வரி கொடுக்க வேண்டும் என அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.#ChandrababuNaidu
    விஜயவாடா:

    தெலுங்கானா மாநிலம் தனிமாநிலம் ஆனதால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால் அதை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டது.

    இதற்காக பாராளுமன்றத்தில் தெலுங்குதேசம் எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து சபை நடைபெற முடியாதபடி தினமும் அமளியில் ஈடுபட்டனர். பா.ஜனதா கூட்டணியில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. பா.ஜானதாவை கடுமையாக எதிர்த்து வரும் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் 3 நாள் மாநாடு விஜயவாடாவில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தெலுங்கு தேசம் தலைவரும், முதல்- மந்திரியுமான சந்திரபாபு நாயுடு மத்திய பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

    ஆந்திராவின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க மறுத்து வருகிறது. தலைநகர் அமராவதியில் இருந்து வருமானவரி, சொத்து வரி, ஜி.எஸ்.டி வரி என மிகப்பெரிய அளவில் வரி வசூலாகி மத்திய அரசுக்கு செல்கிறது.



    ஆனால் மத்திய அரசு புதிய தலைநகரை உருவாக்க போதுமான நிதி வழங்க மறுத்து வருகிறது. ஆந்திராவுக்கு உலக தரத்திலான புதிய தலைநகர் தேவைப்படுகிறது. தெலுங்கானா மாநிலத்துக்கு ஐதராபாத்தில் இருந்து கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

    கர்நாடகத்துக்கு பெங்களூரில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு சென்னையில் இருந்தும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. ஏன் ஆந்திரா மட்டும் தலைநகரை உருவாக்ககூடாது.

    குஜராத்தில் ‘தேலேரா’ என்ற நகரை ஸ்மார்ட் சிட்டியாக ரூ.95,000 கோடி செலவில் மாற்றி வருகிறது. அதற்கு நிதி தேவைப்படுகிறது. அதனால் அமராவதிக்கு நிதி மறுக்கப்படுகிறது. அவர்கள் மட்டும் தேலேராவை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றலாம். நாம் அமராவதியை உருவாக்க கூடாதா?

    ஆந்திராவை புறக்கணிக்கும் மத்திய அரசுக்கு நாம் ஏன் வரி கொடுக்க வேண்டும். ஆந்திர அரசு தனது நிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் ஒட்டு மொத்தமாக அமராவதி கட்டுமான பணிக்கு ஒதுக்குவதாக எதிர்க்கட்சிகள் குறைகூறுவது தவறு. அமராவதியின் வளர்ச்சி ஒவ்வொருவருக்கும் பயன் அளிக்கும்.

    அமராவதியில் உள்கட்டமைப்புகள் செய்து வருகிறோம். சாலைகள், கழிவு நீர் கால்வாய், மின்சாரம், குடிநீர், குடியிருப்புகள் கட்டப்படுகின்றனர். அமராவதி நகரம் வளர்ச்சி அடைந்தது வருமானம் பெருமளவில் கிடைக்கும். இது மாநிலத்தின் மற்ற வளர்ச்சி பணிகளுக்கு பயன் அளிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.#ChandrababuNaidu
    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என கூறி ராஜினாமா செய்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள், ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகரை வலியுறுத்த உள்ளனர். #AndhraPradesh #specialstatus
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்குதேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் மீது அதிருப்தி தெரிவித்தார்.

    மத்திய அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்களை பதவி விலக வைத்தார். அதன்பின் பா.ஜ.க.வுடனான கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது.

    இதேபோல் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் ராஜினாமா கடித்தத்தை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மக்களவை சபாநாயகரிடம் அளித்தனர்.

    ஆனால் இதுவரை சபாநாயகர் அவர்களது ராஜினாமாவை ஏற்கவில்லை என்றும், அதற்கான காரணமும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, கடந்த வாரத்தில் சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து எம்.பி.க்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் நாளை (மே.29) சபாநாயகரை நேரில் சந்திக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவரான மேகபதி ராஜமோகன் ரெட்டி கூறுகையில், ‘நாளை குறித்த நேரத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்து எங்களது விளக்கத்தை அளித்து ராஜினாமாவை ஏற்கும்படி வலியுறுத்துவோம். இதுவரை ராஜினாமாவை ஏற்காததற்கான காரணம் தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

    ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் மக்களவை சபாநாயகர், எம்.பி.க்களின் ராஜினாமாவை ஏற்று, 5 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வழிவகுப்பாரா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. #AndhraPradesh #specialstatus
    ×